உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாய் தொல்லையால் மக்கள் அச்சம்

நாய் தொல்லையால் மக்கள் அச்சம்

காரைக்கால் நெடுங்காடு பகுதிகளில், தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதில், சில நாய்கள், சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தனியாக நடந்து செல்லும் மக்களையும் தூரத்திச் சென்று கடிக்கிறது. இதனால் மக்கள் அச்சத்தில் செல்கின்றனர்.நேற்று முன்தினம் அகரமாங்குடி சாலையில் நடந்து சென்ற பாலு என்பவரை விரட்டி கடித்ததில், அவர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், பாலையா மற்றும் பழனி ஆகியோர் வீட்டு தோட்டங்களில் இருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 6 ஆடுகள் இறந்துள்ளன. இதனால், நெடுங்காடு பகுதி மக்கள் நாய் தொல்லையால் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ