உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

நெட்டப்பாக்கம்: மடுகரையில் தார்சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது. மடுகரை – புதுச்சேரி சாலை ரூ. 16 கோடி செலவில் புதுப்பிக்க பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு தேர்தல் காரணமாக பணி கிடப்பில் போடப்பட்டது. தேர்தலுக்கு பிறகு சாலை அமைக்கும் பணி துவங்கிய நிலையில், மடுகரை – கரியமாணிக்கம் சாலையினை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மடுகரை அம்பேத்கர் சிலை எதிரில் நேற்று காலை 11:00 மணியளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் மடுகரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சரவணன், இளநிலைப் பொறியாளர் வீரமுத்து ஆகியோர்  மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுப்பட்டவரகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை