கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம்; டி.ஐ.ஜி., குறைகேட்பு
பாகூர் :கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வில், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பங்கேற்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பங்கேற்று, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், பொது மக்கள் தரப்பில் 'பல்மைரா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் ஏரளாமானோர் வந்து செல்லும் நிலையில், அங்கு தன்னார்வலராக பணியாற்றி பல உயிர்களை மீட்ட மூ.புதுக்குப்பம் மீனவர் பேரிடர் மீட்பு படையினருக்கு உரிய அங்கீகாரம் அளித்திட வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்ல வேண்டும். வாகன தனிக்கை பணியை தீவிரப்படுத்திட வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயக்குமார், முருகானந்தம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.