உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம்

போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம்

புதுச்சேரி: உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்த, மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் குறைகளை கேட்டறிந்தார். புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி, கடந்த வாரம் சனிக்கிழமை (1ம் தேதி) மக்கள் மன்றம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, நேற்று (7ம் தேதி) சனிக்கிழமை அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் மன்றம் நடந்தது. உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சி, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் நடந்தது. அவர் பொது மக்களின் குறைகளை கேட் டறிந்தார். நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செந்தில்குமார், ஜெயகுமார் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ