உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரிக்கலாம்பாக்கம் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

கரிக்கலாம்பாக்கம் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி

வில்லியனுார்: கரிக்கலாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கரிக்கலாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் மேற்கு பகுதி எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள வில்லியனுார், திருக்கனுார், காட்டேரிக்குப்பம், நெட்டப்பாக்கம், திருபுவனை ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமை தாங்கினார். மேற்கு எஸ்.பி., சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் புகார்களை தெரிவித்தனர். அதில் 14 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, சீனியர் எஸ்.பி.,க்கு உத்தரவிட்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 15 மொபைல் போன்களை உரியவர்களிடம் சீனியர் எஸ்.பி., கலைவாணன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை