தவளக்குப்பத்தில் மக்கள் மன்றம்
அரியாங்குப்பம்: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமை தோறும், மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் மன்றத்தில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் கலந்து கொண்டார். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, பொதுமக்கள் தெரிவித்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ் பெக்டர்கள், சப் இன்ஸ்பெக் டர்கள் கலந்து கொண்டனர்.