மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
19-Jul-2025
திருபுவனை : புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி திருபுவனை காவல் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ஐ.ஜி., சத்திய சுந்தரத்திற்கு திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தி, வரவேற்றனர். பொதுமக்களிடம் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, டி.ஐ.ஜி., பேசுகையில், 'புதுச்சேரியில் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, மதுபானங்கள் கடத்தல், போதை பொருட்கள், கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பொது மக்களிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று தனித்தனியே விசாரணை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா, காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
19-Jul-2025