உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மீனவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

 மீனவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

புதுச்சேரி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மீனவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: மீனவர்களின் பணியை போற்றும் வகையில் இன்று 21ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் கடலும், உள்நாட்டு நீர் நிலைகளும் மிகுந்துள்ள பகுதியில் வாழும் மீனவர்கள் மூன்றாவது பெரிய சமுதாயமாக விளங்குகின்றனர்.மாநில பொருளாதாரத்திற்கும், ஏற்றுமதிக்கும், உணவு உற்பத்திக்கும், வேலை வாய்ப்பிற்கும், துணை தொழில்களின் வளர்ச்சிக்கும், பெரும் பங்காற்றி வருகின்றனர்.ஆனால் துரதிஷ்டவசமாக அனைத்து நிலைகளிலும் பின்தங்கி உள்ளனர். அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக புதுச்சேரி அரசு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அவர்கள் படிப்பிற்கான நிதி உதவி, தொழில் சார்ந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். அத்திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீனவர் நல வாரியம் உருவாக்கி, மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தை சீரமைத்து, டீசல் பங்குகள் அமைத்து தர வேண்டும். கடல் அரிப்பு ஏற்பட்ட இடங்களில்துாண்டில் வளைவு முறையில் கற்கள் கொட்ட வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்