மேலும் செய்திகள்
தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நிறைவு
01-Apr-2025
வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் சார்பில் 'நோக்கு நிலை பயிற்சி' நடந்தது. இப்பயிற்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி வரவேற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழுவை சேர்ந்த மனோஜ், பயிற்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.பள்ளி ஒருங்கிணைப்பாளர் சாலை சிவசெல்வம் நன்றி கூறினார்.
01-Apr-2025