மேலும் செய்திகள்
சொட்டு நீர் பாசனம் செய்முறை விளக்கம்
19-Jan-2026
திருக்கனுார்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி இளநிலை இறுதி ஆண்டு மாணவிகள், லிங்காரெட்டிப்பாளையத்தில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், காட்டேரிக்குப்பத்தில் ஊரக வேளாண் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ளனர். இப்பயிற்சி, கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் தலைமையின் கீழ் நடக்கிறது. இதில், மாணவிகள் லிங்காரெட்டிப்பாளையம் விவசாயி சீனிவாசன் நெற்பயிரில், அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலைச் சுருட்டுபுழு, தண்டு துளைப்பான் அறிகுறிகள், இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கை சுழற்சி, அவற்றை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். குறைந்த ரசாயண மருந்து பயன்பாடுகளுடன் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பூச்சித்தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் போன்ற வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
19-Jan-2026