உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த மனு

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த மனு

புதுச்சேரி: ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி அரசு சார்பில் ஆட்டோ செயலியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சி.ஐ.டி.யூ., ஆட்டோ தொழிற்சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:ஆட்டோ தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் 1ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து, முதல்வரை சந்தித்து மனு அளித்தோம். முதல்வரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், ஆட்டோ தொழிலை கபலிகரம் செய்யும் வகையில் 'ரேபிடோ' என்ற பைக் டாக்சி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கும், பைக் டாக்சி டிரைவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.எனவே செயலி மூலம் செயல்படும் பைக் டாக்சியை தடை செய் வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும், ஸ்கூட்டர் வாடகை கடைகளை தடை செய்ய வேண்டும்.ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தி அரசு சார்பில் ஆட்டோ செயலியை ஏற்படுத்திட வேண்டும். பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தும் சொந்த வாகனங்களை பறிமுதல் செய்திட வேண்டும்.இவ்வாற மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ