| ADDED : நவ 28, 2025 04:48 AM
புதுச்சேரி: இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், பொருளாளர் சுப்பையா,மாநில குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர். மனுவில், தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை, வினோபா நகர், சின்னையன் பேட்டை, செயின்பால் பேட் பகுதிகளில் மனைகள் இன்றி 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோவில் மனைகள், குளக்கரை மற்றும் பல பகுதிகளில் வாழும் மக்களிடம் இலவச மனைப்பட்டா கோரி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் அரசு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, முருகேசன் நகரில் அரசு மூலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு, இலவச மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.