சிறை கைதியிடம் போன் பறிமுதல்
புதுச்சேரி: மத்திய சிறை கைதியிடம் மொபைல் போனை பறிமுதல் செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். காலாப்பட்டு, மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 250 பேர் உள்ளனர். கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சிறை காவலர்கள் நேற்று முன்தினம், தண்டனை கைதிகள் அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போக்சோ வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் உதயன் அறையில், பதுக்கி வைத்திருந்த மொபைல் போனை சிறைக்காவலர்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.