உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடத்தில் ரகளை: 6 பேர் கைது

இடத்தில் ரகளை: 6 பேர் கைது

புதுச்சேரி: லாஸ்பேட்டை போலீசார் நேற்று (நவ.,23) இ.சி.ஆரில் ரோந்து சென்றபோது, மடுவுபட் தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை அய்யனார்,38; என்பவரை கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று உழவர்கரை விழுப்புரம் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். தனியார் திருமண மண்டபம் அருகில் குடிபோதையில் ரகளை செய்த முத்திரைப்பாளையம் மைக்கேல்,44; என்பவரை கைது செய்தனர். காலாப்பட்டு போலீசார் நேற்று பெரியகாலாப்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர். தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் அருகில் குடிபோதையில் ரகளை செய்த கழுப்பெரும்பாக்கம் கோவிந்தன்,20; என்பவரை கைது செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார் நேற்று தில்லை மேஸ்திரி வீதி, காந்தி வீதி சந்திப்பில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த சின்ன மணிக்கூண்டு தியாகராஜன்,42; என்பவரை கைது செய்தனர். மங்கலம் போலீசார் நேற்று கரிக்கலாம்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். கோர்க்காடு கன்னிமார கோவில் தெருவில் பொது இடத்தில் மது அருந்திய கடலுார், கிளிஞ்சிக்குப்பம் சிவக்குமார்,39; என்பவரை கைது செய்தனர். பள்ளூர் போலீசார் நேற்று பரல் சோக்லி சாலையில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த கேரளம் தலசேரி நஜிமுதீன்,63; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை