நடவு செயல்விளக்கம்
புதுச்சேரி: பள்ளிப்புதுப்பட்டில் பப்பாளி, தர்பூசணி நடவு குறித்து குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் நிரஞ்சனா, வீனா, பிரியதர்ஷினி, நந்தினி, சுவேதா, பிரவினா, பிரித்தி, சினேகா, சுபா ஆகியோர் பண்டசோழநல்லுாரில் தங்கி அப்பகுதியில் ஊரக தோட்டக்கலை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பள்ளிப்புதுப்பட்டில், உள்ள ஹைடெக் விவசாயி அனந்தராமன் விவசாய நிலத்தில், பப்பாளி, தர்பூசணி விதை கன்றுகளை நடவு செய்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.