புதுச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு
புதுச்சேரி: புதுச்சேரி பிரிமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் தேர்வு துத்திப்பட்டு சி.ஏ.பி., அகடெமி மைதானத்தில் நேற்று நடந்தது.கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி நடத்தும் புதுச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நேற்று துத்திப்பட்டில் உள்ள ஏ.சி.பி., அகடெமியின் வெளிப்புற பயிற்சி கூடத்தில் நடந்தது.தேர்வுக்கு, ஆன்லைன் மற்றும் நேரடியாக 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 275 மேற்ப்பட்ட வீரர்கள் நேற்று கலந்து கொண்டனர். அவர்களின் திறமைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, 8 பயிற்சியாளர்கள் அவர்களை தேர்வு செய்தனர்.முன்னாள் செயலாளர் சந்திரன் வீரர்களுக்கான தேர்வு முறைகள் குறித்து விளக்கினார். காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தேர்வு நடந்தது.இதில், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வரும் 8ம் தேதி முதல் திறன் வெளிப்பாடு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இந்த போட்டிகளை புதுச்சேரி பிரிமியர் லீக், 6 அணிகளின் உரிமையாளர்கள், தங்களது பயற்சியாளர்களுடன் பங்கேற்று, தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுப்பர்.