உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவிகளுக்கு தொல்லை ஆசிரியர் மீது போக்சோ

மாணவிகளுக்கு தொல்லை ஆசிரியர் மீது போக்சோ

புதுச்சேரி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி அடுத்த வடக்கு புறத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலை பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் ஆசிரியர் சுரேஷ் (எ) சுப்ரமணி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்வித் துறைக்கு புகார்கள் சென்றன. இது குறித்து துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காலாப்பட்டு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஆசிரிரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை