உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய பஸ் நிலைய செக்யூரிட்டிகளுக்கு போலீசார் பாதுகாப்பு ஆலோசனை

புதிய பஸ் நிலைய செக்யூரிட்டிகளுக்கு போலீசார் பாதுகாப்பு ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகளுக்கு போலீசார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் இன்று (நவ.,19) புதிய பஸ் நிலையத்தில் பணியாற்றும் தனியார் செக்யூரிட்டிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கினர். அப்போது, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பேசுகையில், பஸ் நிலையத்தில் தகராறு, மோதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டாலோ, எதிர்பாராத விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ, உருளையன்பேட்டை போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், தனியாக பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்காமல், போலீசாரின் உதவியுடன் சுமுகமாக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, பஸ் நிலைய தனியார் செக்யூரிட்டிகள் எவ்வித அச்சமுமின்றி தன்னம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் போலீசார் ஊக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !