உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை

10 சவரன் நகை திருட்டு போலீசார் விசாரணை

புதுச்சேரி : ஏ.சி.மெக்கானிக் வீட்டில் 10 சவரன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சித்தன்குடி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிமுத்து, 52; ஏ.சி., மெக்கானிக். இவரது மனைவி வினோலி, தனது 10 சவரன் நகையை கடந்த 20ம் தேதி வீட்டின் அலமாரியில் வைத்திருந்தார். கடந்த 28ம் தேதி உறவினர் சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அலமாரியில் வைத்திருந்த நகையை பார்த்தபோது, காணவில்லை.வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம் என, தெரியவந்தது.இதுகுறித்து வினோலி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !