மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
15-Jun-2025
பாகூர்: பாகூர் அடுத்த குருவிநத்தம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் சின்னராசு 57; டிரைவர். இவருக்கு, நீரிழிவு நோய் இருந்து வந்த நிலையில், வலது கால் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு, ஆறாமல் இருந்தது. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இவரது மனைவி மரியா 43; நேற்று முன்தினம் இரவு ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு ஆனத்துாருக்கு சென்றிருந்தார். சின்னராசு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்றிருந்த அவரது மகன் சின்னமணி நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சின்னராசு, வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில், பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்னராசு உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது மனைவி மரியா அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
15-Jun-2025