உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இன்ஜி., மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

இன்ஜி., மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை

புதுச்சேரி: வாணரபேட்டையில் சரியாக படிக்கவில்லை என, மகனின் மொபைலை தந்தை உடைத்ததால், மனமுடைந்த இன்ஜினியரிங் மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, வாணரப்பேட், தாமரை நகரை சேர்ந்தவர் மதுரை, 56; எலக்ட்ரிஷன். இவரது மகன் சண்முகராஜா, 25; புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 4ம் ஆண்டு படித்து வந்தார். சண்முகராஜா 3ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்து அரியர் வைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவரது தந்தை மதுரை சரியாக படிக்காமல் மொபைல் போனை பார்த்து கொண்டிருந்ததாக கூறி, சண்முகராஜாவின் மொபைல் போனை பிடுங்கி உடைத்தார்.இதில், மனமுடைந்த சண்முகராஜா, நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை, குடும்பத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி