உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

கொத்தனார் மரணம் போலீஸ் விசாரணை

நெட்டப்பாக்கம்: மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்நத்வர் நாராயணன், 50; கொத்தனார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் நாராயணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 7:௦௦ மணியளவில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த மடுகரை போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது, நாராயணன் அழுகிய நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ