உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டி.ஜி.பி., உத்தரவால் போலீசார் குஷி

டி.ஜி.பி., உத்தரவால் போலீசார் குஷி

புதுச்சேரி அரசில் வார விடுமுறை, விழாக்கால விடுமுறை ஏதும் இன்றி வேலை செய்யும் துறை போலீஸ். அவசர காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் விடுமுறை இன்றி போலீசார் வேலை செய்வர். போலீசாரின் சேவையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி போலீசாருக்கு 13வது மாத சம்பளம், ஊக்க தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போலீசில் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஜனவரியில் அளிக்கப்படும் 13வது சம்பளம், போலீசாருக்கு பொங்கல் பண்டிகை செலவுக்கு உதவியாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக போலீசாருக்கான 13வது மாத சம்பளம் 5 அல்லது 6 மாதம் கழித்தே கிடைத்து வந்தது. இது குறித்து போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங் கவனத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். உடனடியாக போலீசாருக்கான 13வது சம்பள ஊக்க தொகையை வழங்க உத்தரவிட்டதுடன், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு, 13வது மாத சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. எதிர்பாராமல் வந்த சம்பளத்தை கண்டு போலீசார் குஷியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை