மேலும் செய்திகள்
பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
05-Mar-2025
புதுச்சேரி : சாரம் பகுதியில் டாக்டர் வீட்டில் இன்வெர்ட்டர் திருடி சென்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, சாரம், பிருந்தாவனத்தைச் சேர்ந்தவர் அருண்சேகர், 41; மேல் மருவத்துார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.கடந்த 16ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டபோது, வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் வேலை செய்யவில்லை.இதையடுத்து, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 6 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான இன்வெர்ட்டர் திருடு போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து அருண்சேகர் அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் டாக்டர் வீட்டில் இருந்து இன்வெர்ட்டரை திருடி செல்வது தெரியவந்தது.இதையடுத்து, இன்வெர்ட்டரை திருடி சென்ற மர்ம பெண் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
05-Mar-2025