மேலும் செய்திகள்
கரூரில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி
12-Aug-2025
காரைக்கால் : காரைக்காலில் சாலை யோரம் நின்றிருந்த ஆட்டை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் நெடுங்காடு மேலஅன்னவாசல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி அமுதா. கூலி தொழிலாளி. கணவன் இறந்த நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வரும் அமுதா வீட்டில் ஐந்து ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை வீட்டு அருகில் உள்ள வயல்களில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளை ஆட்டை பருத்திக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ராஜா மகன் ராஜசேகர், 35; என் பவர் ஆட்டை திடிக்கொண்டு வண்டியில் சென்றுள்ளார். இது குறித்து நெடுங்காடு போலீசில் அமுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராஜசேகர் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
12-Aug-2025