மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய போதை நபர் கைது
18-Oct-2026
காரைக்கால்: திருநள்ளாறு, சுரக்குடி அழகு நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் சிதார் மகன் அனில்குமார் சிதார், 14. கடந்த 31ம் தேதி வெளியே சென்ற இவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என, சந்தேகித்து, அவரது தந்தை ராம்குமார் சிதார் நேற்று திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சிறுவன் குறித்து தகவல் தெரிந்தால் திருநள்ளாறு காவல் நிலையத்தை 04368 23665 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
18-Oct-2026