மேலும் செய்திகள்
மிலாடி நபியையொட்டி நாளை மதுக்கடை மூடல்
16-Sep-2024
புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் இரவு 11 மணிக்கு மேல் திறந்து வைத்திருந்த மதுபான கடைகளை மூட போலீசார்அறிவுறுத்தினர்.புதுச்சேரியில் மதுபானக்கடைகளை இரவு 11.00 மணிக்குள் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சில மதுபான கடைகள் நள்ளிரவு வரை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து பெரியக்கடை போலீசார் நேற்று இரவு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மதுபான கடைகளை திறந்து வைத்து வியாபரம் செய்து கொண்டிருந்த கடைகளை மூட வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இதுபோன்று கடைகளை திறந்து வைத்து வியாபரம் செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
16-Sep-2024