உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூலி தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

கூலி தொழிலாளி சாவு போலீசார் விசாரணை

பாகூர்: கடலுார் மாவட்டம், குணமங்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோதிவேலு, 39; கூலி தொழிலாளி. இவருக்கு, மலர்கொடி,37, என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். ஜோதிவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், கடந்த ஜூன் மாதம், குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால், அவரது மனைவி மலர்கொடி கோபித்து கொண்டு, குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில், மனமுடைந்த ோதிவேலு மது குடித்து வந்தார். நேற்று (நவ.,28) இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜோதிவேலு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரர் இன்று (நவ.,29) காலை அவரை தேடிப்பார்த்தபோது, குருவிநத்தம் சித்தேரி அருகில் உள்ள தனியார் மதுபான கடை எதிரே படுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை