உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

போதை பொருட்களின் தீமைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

அரியாங்குப்பம்: போதை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் தீமைகள் குறித்து, அரியாங்குப்பம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புதுச்சேரியில் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான, குட்கா, பான்மசாலா ஆகிய போதை பொருட்கள் பெட்டி கடைகளில் விற்பதை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அரியாங்குப்பம் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, துண்டு பிரசுரத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை