மேலும் செய்திகள்
இ.சி.ஆரில் பேனர்: 2 பேர் மீது வழக்கு
11-Mar-2025
புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் முத்தியால்பேட்டை, மகாத்மா காந்தி வீதி- பிள்ளையார் கோவில் வீதி சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து, புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்த மர்மநபர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
11-Mar-2025