உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., பிரமுகர் கொலை குற்றவாளிகளுடன் போலீசார் ஒத்திகை: பொதுமக்கள் அவதி

பா.ஜ., பிரமுகர் கொலை குற்றவாளிகளுடன் போலீசார் ஒத்திகை: பொதுமக்கள் அவதி

புதுச்சேரி: பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகளை கொண்டு போலீசார் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு நடத்தியதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதியடைந்தனர்.புதுச்சேரி, சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் உமாசங்கர், 38; பா.ஜ., பிரமுகரான இவரை கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரவு கருவடிக்குப்பத்தில் 9 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரிமாரியாக வெட்டி கொலை செய்தது.இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளியான ரவுடி கருணா உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ரவுடி கருணா உள்ளிட்ட குற்றவாளிகளை கொண்டு கொலை செய்த சம்பவம் குறித்து எஸ்.பி., வீரவல்லவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கணேஷ், இனியன், கார்த்திக்கேயன் மற்றும் போலீசார் நேற்றுநள்ளிரவு 11:30 மணியளவில் கருவடிக்குப்பத்தில் கொலை குறித்து ஒத்திகை நடத்தினர்.இதற்காக முத்தியால்பேட்டை, இ.சி.ஆரில் போலீசார் 2 மணி நேரத்திற்கு முன் பேரி கார்ட் போட்டு சாலையை அடைத்தனர். அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ