உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாழைக்குளத்தில் மாயமான 11 வயது சிறுவன் 1:30  மணி நேரத்தில் போலீசார் மீட்பு 

வாழைக்குளத்தில் மாயமான 11 வயது சிறுவன் 1:30  மணி நேரத்தில் போலீசார் மீட்பு 

புதுச்சேரி : வாழைக்குளத்தில் மாயமான 11 வயது சிறுவனை, 1.30 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.புதுச்சேரி வாழைக்குளம், நாகமுத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி வள்ளி, 47; இவரது மகன் விக்ராந்த், 11; நகர பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விக்ராந்த் தாய் வள்ளி பராமரிப்பில் இருந்து வருகிறார்.நேற்று காலை 6:50 மணி முதல் வீட்டில் இருந்த விக்ராந்த் திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த வள்ளி மகன் மாயமானது குறித்து காலை 9:30 மணிக்கு முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே கிழக்கு கிரைம் போலீஸ் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அலர்ட் ஆகினர்.எஸ்.பி., லட்சுமிசவுஜன்யா, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் முத்தியால்பேட்டை சம்பவம் போல் ஏதேனும் நடந்துவிட கூடாது என அப்பகுதி உள்ள சி.சி.டி.வி., கடற்கரை, வாய்க்கால்கள் என தனித்தனி டீம் பிரித்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.காலை 10:50 மணிக்கு, பாரதி பூங்காவில் இருந்த சிறுவன் விக்ராந்தை போலீசார் கண்ட பின்பே நிம்மதி பெருமூச்சி விட்டனர். சிறுவனை மீட்டு வந்த போலீசாரை கண்டதும், தாய் வள்ளி போலீசாரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறினார்.சிறுவனை அழைத்து வந்து விசாரித்தபோது, விக்ராந்த் 5ம் வகுப்பு முடித்ததும்,நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு சேர்த்தனர். அங்கு சக மாணவர்கள் அவரை கிண்டல் செய்ததால் கடந்த 4 மாதங்களமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.வேலைக்கு செல்லும் தாய் வள்ளி, சிறுவன் விக்ராந்த்தை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தினசரி வேலைக்கு சென்று மாலை திரும்பி வந்துள்ளார். நாள் முழுதும் வீட்டிற்குள் இருப்பது பிடிக்காமல் சிறுவன் வீட்டை விட்டு வெளியே ஓடி சென்றது தெரியவந்தது. சிறுவன் பெற்றோர் இருவரையும் அழைத்த போலீசார் அறிவுரை கூறி குழந்தையுடன் விளையாட நேரம் செலவிட அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ