உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்மைரா கடற்கரையில் குளிக்க தடை போலீசார் எச்சரிக்கை

பல்மைரா கடற்கரையில் குளிக்க தடை போலீசார் எச்சரிக்கை

பாகூர்: மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை பகுதியில், குளிக்க தடை விதித்து, கிருமாம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து 12 பேர் கொண்ட ஒரு குழுவினர், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள், நேற்று முன்தினம், அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச்சிற்கு சென்று கடலில் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி, ஐந்து பேர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து, 5 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் 2 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் நேற்று விடுமுறை தினம் என்பதால், ஏரளாமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் குவிந்திருந்தனர். அங்கு, கிருமாம்பாக்கம் போலீசார் பாதுகாப்ப பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்,சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் கடலுக்குள் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ கூடாது என, ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து, அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை