உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருப்பட்டினத்தில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு கலால் துறையிடம் அரசியல் கட்சியினர் மனு

திருப்பட்டினத்தில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு கலால் துறையிடம் அரசியல் கட்சியினர் மனு

புதுச்சேரி: காரைக்கால் திருப்பட்டினத்தில் குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பார் அமைக்க கூடாது என அரசியல் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர். காரைக்கால் திருபட்டினம் மலையான்தெரு முகப்பு அருகில் குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பார் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் ரெஸ்டோ பார் துவங்க அரசு அனுமதி அளித்ததை கண்டித்து அப்பகுதி மக்கள், மா.கம்யூ., மனித நேய கட்சியினர் போராட்டம் நடத்தினர். நேற்று புதுச்சேரி கலால் அலுவலகம் திரண்ட காரைக்கால் மா.கம்யூ., மனித நேய கட்சி நிர்வாகிகள் மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமையில் கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சின்சை சந்தித்து மனு அளித்தனர். குடியிருப்புகள் மத்தியில் ரெஸ்டோ பார்களை துவங்க அரசு அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் கூறும்போது, காரைக்கால் திருப்பட்டினத்தில் கோவில், குளங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியில் ரெஸ்டோ பார்கள் அனுமதி அளித்துள்ளதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளோம். அரசு தனது முடிவினை மாற்றிக்கொள்ளவில்லையெனில், நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ