மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
பாகூர் : சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா நாளை நடக்கிறது. இக் கோவிலில் செடல், தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காமதேனு, சிங்கம், குதிரை வாகனத்தில் வீதியுலாவும் நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா நாளை 5ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
5 hour(s) ago | 5