மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கிருமாம்பாக்கம் : முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழா பாகூர் தொகுதியில் தியாகராஜன் எம்.எல்.ஏ., தலைமையில் கொண்டாடப்பட்டது.முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி நேற்று தியாகராஜன் எம்.எல்.ஏ., முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பாகூர் மூலநாதர் கோவில், பூலோக மாரியம்மன் கோவில், கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் தியாகராஜன் எம்.எல்.ஏ., மற்றும் என்.ஆர். காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின், மக்களுக்கு அன்னதானத்தையும், குருவிநத்தம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகளையும் தியாகராஜன் எம்.எல்.ஏ., வழங்கினார். மணப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். இளைஞர்களுக்கு விளையாட்டு சீருடைகள், மக்களுக்கு சமபந்தி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1