மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
52 minutes ago | 1
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
புதுச்சேரி:சமச்சீர் பாட புத்தகங்களை உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அதன் தலைவர் பாலா (எ) பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1.27 கோடி மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. காலம் கடந்து கிடைத்தாலும் இது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு சமச்சீர் கல்விக்குழு முன்னாள் தலைவர் முத்துகுமரன் அளித்த அனைத்து பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு சமச்சீர் பாட புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்.
52 minutes ago | 1
1 hour(s) ago | 2