உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., அலுவலகத்தில் நடந்த விழாவில்முன்னாள் எம்.எல்.ஏ., அதிரடி பேச்சு

காங்., அலுவலகத்தில் நடந்த விழாவில்முன்னாள் எம்.எல்.ஏ., அதிரடி பேச்சு

புதுச்சேரி:காங்., அலுவலகத்தில் நடந்த ராஜிவ் பிறந்த நாள் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.காங்., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா நடந்தது. காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில், ராஜிவ் உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., நீல கங்காதரன் பேசுகையில், காங்., கட்சி ஒரு பேரியக்கம். சிலர் சோனியா, ராகுல் படத்துடன் விளம்பரம் செய்து தாங்கள் தான் காங்., கட்சி என்கின்றனர். அதில் மாநிலத் தலைவர் படம் இல்லை. இவர்கள்தான் கட்சியை கட்டுக் கோப்பாக நடத்தப் போகிறார்களா? தேர்தல் தோல்வி குறித்து வேட்பாளர்கள் 30 பேர் மட்டுமே ஓட்டலில் ரூம் போட்டு பேசினால் பிரச்னை தீர்ந்து விடுமா? நாங்கள் கட்சிக்காக வேலை செய்யவில்லையா?காங்.,தோல்வி குறித்து ஆராய நிர்வாக குழுவை தலைமை கூட்டியிருக்க வேண்டும் என்றார்.காங்., பிரமுகர் காசிலிங்கம் பேசும்போது; நம்மை தோற்கடித்த ரங்கசாமியின் ஆட்சி இங்கு நடக்கிறது. ஆனால் அவருடன், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சிரித்து பேசுகின்றனர் என்றார். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி