உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் நகரில் எம்.எல்.ஏ., குறைகேட்பு

அரவிந்தர் நகரில் எம்.எல்.ஏ., குறைகேட்பு

புதுச்சேரி:மணவெளி தொகுதிக்குட்பட்ட டோல்கேட் அரவிந்தர் நகர் பகுதியில் புரு÷ஷாத்தமன் எம்.எல்.ஏ., மக்கள் குறை கேட்டறிந்தார்.அப்போது, சமீபத்தில் பெய்த மழையால், வடிகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதை மக்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, போர்க்கால அடிப்படையில் அப்பகுதியில் உள்ள குறுக்குச் சாலைகளுக்கு செம்மண் கொட்டி மேம்படுத்தவும், வடிகால் வாய்க்காலைத் தூர் வாரி மழை நீர் தடையின்றி செல்லவும் ஏற்பாடு செய்வதாகக்கூறினார்.மேலும், அப்பகுதியில் எரியாமல் உள்ள தெரு மின் விளக்குகளை உடனடியாக சரி செய்யவும் ஏற்பாடு செய்தார். அரவிந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் மொட்டையன், செயலாளர் கிருஷ்ணராஜ், பொரு ளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை