உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இளம் பெண்களின் மேன்மைக்கானராஜிவ்காந்தி திட்டம் துவக்கம்

இளம் பெண்களின் மேன்மைக்கானராஜிவ்காந்தி திட்டம் துவக்கம்

காரைக்கால்:காரைக்காலில் வளர் இளம்பெண்களின் மேன் மைக்கான ராஜிவ்காந்தி (சப்லா) திட்டத்தை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.வளர் இளம்பெண்களின் மேம்மைக்கான ராஜிவ்காந்தி திட்டம் இந்தியாவில் 200 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வளர்இளம் பெண்களுக்கு சத்தான உணவு, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் காரைக்கால் மாவட்டமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழா காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்தது.நல அதிகாரி வேதாச்சலம் வரவேற்றார். வேளாண் அமைச்சர் சந்திரகாசு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், சிவா, சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கலெக்டர் பிராங்கிளின் லால்டின்குமா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் மோகன்தாஸ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சமூகநலத்துறை அமைச்சர் ராஜவேலு, வளர் இளம்பெண்களின் மேன்மைக்கான ராஜிவ்காந்தி திட்டம் மற்றும் விதவையின் மகள் திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் வீதம் 37 பேருக்கு நிதி உதவி வழங்கி பேசுகையில், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கடந்த காலத்தில் சட்டசபையில் மக்கள் நலதிட்டத்திற்காக பேசியும், காரைக்கால் புறக்கணிக்கப்பட்டிருந்தது மக்களுக்குத் தெரியும். புதிய முதல்வர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை உருவாக்கியுள்ளார். காலதாமதத்தாலும், நிதி பற்றாக்குறையாலும் திட்டங்களை உடனடியாக செய்ய முடியவில்லை.சட்டசபை முடிந்தவுடன் பல திட்டங்கள் செயல்படுத்த தயாராக உள்ளோம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல சலுகைகள் காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்