மேலும் செய்திகள்
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு
27 minutes ago
புதுச்சேரி:புதுச்சேரி தலித் விடுதலைப் பேரவை சார்பில் மகளிர் அணி அறிமுகக் கூட்டம், ஏம்பலத்தில் நடந்தது.சுப்ரமணி தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் அருள்தாஸ், சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், செயலாளர் வீரகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஏம்பலம் பகுதியில் 50 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்கப்படாமல், ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வசிக்கும் நிலை உள்ளது. எனவே, விரைவில் இப்பகுதியில் இலவச மனைப்பட்டா வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது. ஏம்பலம் காலனி மக்களுக்கு பொது கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறை மூலம் தீபாவளிக்கு முன்பாக இலவச கைலி சேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
27 minutes ago