மேலும் செய்திகள்
தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
28-Jan-2025
புதுச்சேரி: தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், நாடு முழுவதும் உள்ள 93 ஆர்.எம்.எஸ். அலுவலகங்கள் இணைப்பை கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். புதுச்சேரி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க உதவி பொதுச் செயலாளர் சேகர் முன்னிலை வைத்தார். இதில் புதுச்சேரி தபால்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
28-Jan-2025