உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலுக்கு சென்ற விசை படகுகள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

கடலுக்கு சென்ற விசை படகுகள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

புதுச்சேரி: எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற புதுச்சேரி விசை படகுகள் உடனே கரை திரும்ப மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, கடந்த 13ம் தேதி முதல் வரும் நாளை 17ம் தேதி வரை, வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது. ஆனால், புதுச்சேரியை சேர்ந்த சில விசை படகு மீனவர்கள் எச்சரிக்கையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதுதொடர்பாக மீன்வளத்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, மீன்வளத்துறை எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றுள்ள பதிவு பெற்ற விசை படகுகள், துறைரீதியான நடவடிக்கையை தவிர்க்க உடனே கரை திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை