உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் நுகர்வோர்கள் குறை தீர்வு முகாம்

மின் நுகர்வோர்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி: மின்துறை சார்பில் மின்நுகர்வோர் குறை தீர்வு முகாம், லாஸ்பேட்டையில் இன்று (13ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி இ.சிஆர்., லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள ராதே கிருஷ்ணா வைபவ நிலையத்தில் இன்று (13ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை குறை தீர்வு முகாம் நடக்கிறது. எனவே, மின்வினியோகம் பெறும் கோரிமேடு, லாஸ்பேட்டை மற்றும் அசோக் நகர் பகுதியில் உள்ள மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின்பட்டியல், குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெரு விளக்கு மற்றும் மின்நுகர்வு தொடர்புடைய குறைகள் ஏதேனும் இருந்தால், முகாமில் தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை