12ம் தேதி மின்துறை குறைதீர்வு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் மின்நுகர்வோர் குறைதீர்வு முகாம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறையில் மின்நுகர்வோர் குறை தீர்வு முகாம் வரும் 12ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது. புதுச்சேரி, கூடப்பாக்கம், மந்தவேலி திடல், லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கும் முகாமில், ராமநாதபுரம், சேதராப்பட்டு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் பட்டியல், குறைந்த மின் அழுத்தம், மின்மானிகளின் குறைபாடு, தெருவிளக்கு மற்றும் மின்சாரம் தொடர்புடைய குறைபாடுகளை எழுத்து வடிவில் நேரில் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.