மேலும் செய்திகள்
ஸ்ரீராம் பள்ளியில் பசுமை தின விழா
15-Sep-2025
வில்லியனுார்,: சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் கற்றல் வளமையம் துவக்க விழா நேற்று நடந்தது. சேந்தநத்தம் கிராமத்தில் உள்ள சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு தொடக்கப் பள்ளியில் முன் மழலையர் கற்றல் வளமையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி தலைமை தாங்கினார். ஆசிரியை திவ்வியபாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஐந்தாம் வட்டம் பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் பங்கேற்று குத்து விளக்கேற்றி கற்றல் வள மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆசிரியை ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, விஜயலட்சுமி, சுப்புலட்சுமி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
15-Sep-2025