பிரீமியர் லீக் கிரிக்கெட் ஜனவரியில் துவக்கம்
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் மூன்றாம் ஆண்டு, பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஜனவரி மாதம் துவங்க உள்ளது. தவளக்குப்பம் பிரீமியர் லீக் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, தவளக்குப்பத்தில் நடத்தப்பட்டு வருகிறது.அதையொட்டி, மூன்றாம் ஆண்டு, கிரிக்கெட் போட்டி, தவளக்குப்பம், நல்லவாடு சாலை, தனியார் இடத்தில் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. மே மாதம் வரை நடக்கும் இப்போட்டியில், 10 அணிகள் கலந்து கொள்கின்றன.அதில், தவளக்குப்பம் பிரீமியர் லீக், அணி, இடையார்பாளையம், நல்லவாடு, பிள்ளையார்த்திட்டு, காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் இருந்து கிரிக்கெட் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டி நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது.பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், 'இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறோம். வரும் ஜனவரியில், நடக்கும் போட்டிக்கு, டிசம்பர் மாத்தில், வீரர்களுக்கு ஏலாம் விடப்படுகிறது.நுாற்றுக்கனக்கானோர் அமைர்ந்து பார்க்கும் வகையில், இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது' என்றார்.