உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரீமியர் லீக் கிரிக்கெட் மூன்று அணிகள் ஏலம்

பிரீமியர் லீக் கிரிக்கெட் மூன்று அணிகள் ஏலம்

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் நடைபெற உள்ள பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு, மூன்று அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.தவளக்குப்பத்தில் மூன்றாம் ஆண்டு, பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. அதையொட்டி, தனியார் திருமண்டபத்தில், ஏலம் நடந்தது. பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின், ஒருங்கிணைப்பாளர் உதயா தலைமை தாங்கினார். ஏலத்தில், டைட்டன்ஸ், கிங்ஸ், பேட்ரி யார்ட்ஸ், பைட்டர்ஸ், சோல்ஜர்ஸ், ஸ்பார்ட்டன்ஸ், ஸ்ட்ரைக்கர்ஸ், கிளாடியேட்டர், வாரியர்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு போட்டி, போட்டு ஏலம் கேட்டனர்.அதில், அதிக பட்சமாக சோல்ஜர் அணி, 8 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிங்ஸ் அணி, 7 ஆயிரத்து 600, டைட்டன் அணி 6 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. போட்டி, தவளக்குப்பம் டீ துாள் மைதானத்தில், அடுத்த மாதம் 18ம் துவங்கிறது. இத்தகவலை பிரீமியர் லீக் கிரிக்கெட்டி போட்டியின், ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ