மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக் போட்டி : ப்ளே பாய்ஸ் அணி வெற்றி
04-Nov-2024
புதுச்சேரி, : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய டி-20 லீக் போட்டியில் உப்பளம் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் டி-20 லீக் மற்றும் நாக்அவுட் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் புதுச்சேரி போலீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நடந்து முடிந்த 28 லீக் போட்டிகளில் கோரிமேடு பேன்தர்ஸ் அணி, வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி, குமாரபாளையம் வாரியர்ஸ் அணி, உப்பளம் ராயல்ஸ் அணி முறையே முதல் நான்கு இடங்களை பிடித்தன.அதில், வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. நேற்று முன்தினம் நடந்த பிளே ஆப் குவாலிபயர் 2வது தகுதிச்சுற்று போட்டியில் கோரிமேடு பேந்தர்ஸ் அணி, உப்பளம் ராயல்ஸ் அணி மோதின. முதலில் களமிறங்கிய உப்பளம் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. அணியின் சூர்யா 55 பந்தில், சதம் அடித்தார்.பின் களமிறங்கிய கோரிமேடு பேன்தர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஒரு ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்ற உப்பளம் ராயல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. சதம் அடித்த சூர்யாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் செய்திருந்தனர்.
04-Nov-2024