உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கைதிகள் விளைவித்த பழங்கள் முதல்வரிடம் வழங்கல்

கைதிகள் விளைவித்த பழங்கள் முதல்வரிடம் வழங்கல்

புதுச்சேரி : சிறை கைதிகள் உற்பத்தி செய்த பழங்கள், பேக்கரி உணவு பொருட்களை முதல்வர் ரங்கசாமியிடம், சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வழங்கினார்.காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளுக்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் எடுத்து வருகிறது. அதில், யோகா, இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பேக்கரி உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கைதிகள் மூலம் சிறையில் தயார் செய்யப்பட்ட பேக்கரி உணவு பொருட்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் விளைவித்த காய்கறி, பழங்களை முதல்வர் ரங்கசாமியிடம், சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'சிறைத்துறை நிர்வாகம் மேற்கொள்ளும் இயற்கை விவசாயம், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு போன்ற சிறை கைதிகளின் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு கவனித்து வருகிறது. கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி பொருட்களை வெளி சந்தையில் விற்பனை நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ